என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாம்பே சர்க்கஸ்"
- திருச்சியில் நடைபெற்று வரும் கிரேட் பாம்பே சர்க்கஸில் வெளிநாட்டு கலைஞர்கள் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது
- சேலையில் 40 அடி உயரத்துக்கு மேல் சென்று தலைகீழாக தொங்கி சாகசம் செய்யும் இளம் பெண் கலைஞர் ஒருவர் சேலையை சுற்றி..., சுற்றி... வேகமாக கீழ்நோக்கி வருவதை பார்க்கும்போது உடல் நடுங்குகிறது
திருச்சி:
மும்பையில் 1920 ஆம் ஆண்டுகளில் கிரேட் பாம்பே சர்க்கஸ் நிறுவனம் துவங்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கம்பெனிகள் துவங்கப்பட்டன. இதில் பெரும்பாலான சர்க்கஸ் கம்பெனிகள் காலச்சக்கரத்தில் மூடப்பட்டு விட்டன.
ஆனால் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் பாம்பே சர்க்கஸ் மட்டுமே நூற்றாண்டுகளை தாண்டியும் பீடு நடை போட்டுக் கொ ண்டிருக்கிறது.
கலைஞர்களின் சாகசங்கள் இந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு திருச்சி பொன்மலை ஜி கார்னரில் பாம்பே சர்க்கஸ் தொடங்கியது.
பிற்பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என மூன்று காட்சிகள் நடக்கின்றன. இந்த சர்க்கஸ் கலைஞர்களின் சாகசங்கள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
பார் விளையாட்டு, சைக்கிள் விளையாட்டு, ரஷ்ய பெண் கலைஞரின் ரிங் நடனம், எத்தியோப்பியா நாட்டு கலைஞர்களின் சாகச விளையாட்டுகள், குள்ள மனிதர்களின் ஜோக்ஸ், ஸ்கேட்டிங் சாகசம் என 200க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள்.
ஒரு இளம் பெண் மேஜை மீது படுத்தவாறு கால்களின் பாதங்களில் கொடிமரம் போன்ற 20 அடி உயர இரும்பு கம்பியை நிலை நிறுத்துகிறார். பின்னர் கால்களை வைத்து அசைத்தவாறு பந்தினை ஒவ்வொரு ஸ்டெப்பாக தட்டி விடுகிறார். கடைசியாக அந்த பந்தை லாவகமாக உச்சியில் இருக்கும் கூடையில் சேர்க்கிறார்.
ஒன்று இரண்டு முறை பந்து தவறி விழுந்த நிலையிலும் விடாமுயற்சியுடன் உச்சியில் இருக்கும் கூடையில் பந்தை சேர்ப்பதைக் காணும் பார்வையாளர்கள் வியப்படைந்து ஆரவாரம் செய்கிறார்கள்.
அதேபோன்று சேலையில் 40 அடி உயரத்துக்கு மேல் சென்று தலைகீழாக தொங்கி சாகசம் செய்யும் இளம் பெண் கலைஞர் ஒருவர் சேலையை சுற்றி..., சுற்றி... வேகமாக கீழ்நோக்கி வருவதை பார்க்கும்போது உடல் நடுங்குகிறது.
மேலும் ஒரு எத்தியோப்பியா கலைஞர் 10 அடி உயர மேஜையில் பந்து ஒன்றை வைத்து அதன் மீது பலகையை வைத்து ஏறி நின்று பேலன்ஸ் செய்கிறார். உச்சகட்டமாக அந்த பந்தின் மீது பல அடுக்குகளை தொடுத்து ஏறி நிற்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது.
அதேபோன்று குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் ஒட்டகம், குதிரை,நாய் போன்ற விலங்கினங்கள் மற்றும் கிளிகளின் அற்புத திறமைகள் பளிச்சிடுகின்றன.
காலில் ஸ்கேட்டிங் அணிந்து கொண்டு மேஜை மீது நிற்கும் கலைஞர் ஒருவரை பிடித்துக் பெண் கலைஞர் பிடித்துக் கொண்டு இருவரும் ஒரு சேரவேக வேகமாக மின்னல் வேகத்தில் சுழன்று சுற்றுவது ஆச்சரியமாக இருக்கிறது.
இது பற்றி பார்வையாளர்கள் கூறும்போது, உயிரை பணயம் வைத்து திறமைகளை வெளிப்படுத்தி கலைஞர்கள் செய்யும் சாகசங்கள் நமக்கு ஊக்க மருந்தாக இருக்கிறது. நிஜ ஹீரோக்களை இங்குதான் பார்க்க முடிகிறது. இந்த டிஜிட்டல் உலகில் இரண்டே கால் மணி நேரம் நம்மை இருக்கையில் கட்டி வைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு அவர்களின் திறமையே காரணம்.
பெரிய அளவுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத திருச்சியில் தி கிரேட் பாம் பே சர்க்கஸ் ஒரு வரப்பிரசாதமாக இருக்கின்றது என்றனர்.
கடந்த சில நாட்களாக அரங்கம் நிறைந்த காட்சிகளாக சர்க்கஸ் நடப்பதாக அதன் உரிமையாளர் சஞ்சீவ், மேலாளர் உண்ணி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
- திருச்சி பொன்மலை ஜி. கார்னர் பகுதியில் கிரேட் பாம்பே சர்க்கஸ் திறப்பு விழா நடைபெற்றது.
- அந்தரத்தில் தலைகீழாக தொங்கிய இளம் பெண்ணின் சாகச நிகழ்வு மெய் சிலிர்க்க வைக்கிறது
திருச்சி :
திருச்சி பொன்மலை ஜி. கார்னர் பகுதியில் கிரேட் பாம்பே சர்க்கஸ் திறப்பு விழா நடைபெற்றது. இந்த சர்க்கஸ் நிகழ்வினை திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கிராப்பட்டி பகுதி தி.மு.க. செயலாளர் மோகன்தாஸ், பனையபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமரன் மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் பங்கேற்றனர்.
சர்க்கஸில் இடம் பெற்றிருந்த ரிங் டான்ஸ் பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்தது. அதேபோன்று அந்தரத்தில் தலைகீழாக தொங்கிய இளம் பெண்ணின் சாகச நிகழ்வு மெய் சிலிர்க்க வைக்கிறது.
இதுபற்றி சர்க்கஸ் மேலாளர் உண்ணி கூறும்போது, 1920 களில் மகாராஷ்டிராவில் பாம்பே சர்க்கஸ் தொடங்கப்பட்டது. நூறு ஆண்டுகளைக் கடந்த பின்னரும் மக்களிடம் நல்ல வரவேற்புடன் சர்க்கஸ் நடத்தப்பட்டு வருகிறது. தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என மூன்று நேரம் சர்க்கஸ் நடத்தப்படுகிறது.
ஒரு ஷோ 2 ¼ மணி நேரம் நடைபெறும். இதில் 85 கலைஞர்களின் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சுழற்சி முறையில் பாம்பே சர்க்கஸ் நடத்தப்பட்டு வருகிறது. நாட்டின் மாபெரும் தலைவர்கள் அனைவரும் பாம்பே சர்க்கஸ் பார்த்து ரசித்திருக்கிறார்கள்.
பார்வையாளர்களின் கைத்தட்டல்கள் கலைஞர்களை வாழ வைக்கும். பொன்மலை ஜி கார்னர் பகுதியில் ஒரு மாதம் முழுவதும் சர்க்கஸ் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.
- மதுரையில் கிரேட் பாம்பே சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
- அமெரிக்கா நாட்டு கிளிகளின் சாகசங்கள் போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த சர்க்கசில் இடம் பெறுகின்றன.
மதுரை
''ஏழாம் அறிவு'' திரைப்பட புகழ் '' தி கிரேட் பாம்பே சர்க்கஸ்'' 30 ஆண்டுகளுக்கு பின்னர் மதுரை புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பாம்பே சர்க்கஸ் நிறுவன தலைவர் சஞ்சீவ் பாலகோபால் கூறுகையில், அந்தரத்தில் பறக்கும் ப்ளேடிரிபிள் எனப்படும் விளையாட்டு, ஸ்கேட்டிங் பந்துகளை காலால் உதைத்து சாகசம் செய்தல், ஸ்கைவாக், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா நாட்டு கிளிகளின் சாகசங்கள் போன்ற சிறப்பு அம்சங்கள் இந்த சர்க்கசில் இடம் பெறுகின்றன.
மேலும், 8 பந்துகளை கைகளால் லாவகமாக பிடிக்கும் ஜக்லின் விளையாட்டு, லூஸ்வேர் எனப்படும் கப் அன் சாசர் விளையாட்டு, ஜோக்கர்களின் நகைச்சுவை விளையாட்டுகள் இந்த சர்க்கசில் சிறப்பு அம்சமாக இருக்கும்.
வெளிநாடு, வெளி மாநிலங்களை சேர்ந்த 50-க்கும் ேமற்பட்ட வீரர், வீராங்கனைகள் பல்வேறு சாகச விளையாட்டுகளை நிகழ்த்துகின்றனர். கிளி, புறா, நாய்கள் பல்வகையான வித்தைகளை காட்டி பார்வையாளர்களை கவரும் வகையில் உள்ளது.
தி கிரேட் பாம்பே சர்க்கஸ் தினமும் பகல் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7மணி என 3 காட்சிகளாக நடத்தப்பட உள்ளது. ரூ.100, ரூ.150, ரூ.200, ரூ.300 ஆகிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்